Business

புதிய ஸ்விஃப்ட் காருக்காக ரூ.1,450 கோடி முதலீடு… மாருதி நிறுவனம் அறிவிப்பு

புதிய ஸ்விஃப்ட் காருக்காக ரூ.1,450 கோடி முதலீடு… மாருதி நிறுவனம் அறிவிப்பு
புதிய ஸ்விஃப்ட் காருக்காக ரூ.1,450 கோடி முதலீடு… மாருதி நிறுவனம் அறிவிப்பு


இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம், புதிய ஸ்விஃப்ட் காருக்காக ரூ.1,450 கோடியை முதலீடு செய்துள்ளது. மே 9-ம் தேதி மாருதியின் நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காரின் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.46 லட்சம் வரை உள்ளது.

ஹேட்ச்பேக் மாடலான இதில், புதிய Z- சீரிஸ் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இஞ்சின் பொறுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 82PS பவரையும் 112Nm இழுவிசையும் கொண்டுள்ளதோடு 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் பெற்றுள்ளது.

இந்த புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காருக்காக நாங்கள் தோராயமாக ரூ.1,450 கோடி முதலீடு செய்துள்ளோம். குறிப்பாக இதற்கான கருவிகள், வண்ணச்சாயங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத Z சீரிஸ் இஞ்சின் ஆகியவற்றுக்காக நிறைய செலவழித்துள்ளோம் என புதிய ஸ்விஃப்ட் கார் அறிமுக விழாவின் போது மாருதி சுசூகி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் சிஇஓ ஹிசாஷி டகூசி கூறியுள்ளார்.

இந்த புதிய ஸ்விஃப்ட் கார் குஜராத்தில் உள்ள மாருதி சுசூகியின் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் 169 நாடுகளில் சுமார் 6.5 மில்லியன் ஸ்விஃப்ட் கார்களை இதுவரை மாருதி விற்பனை செய்துள்ளது. ஹேட்ச்பேக் மாடல் கார்களுக்கு 46% பங்களிப்படும் இந்தியா தான் மிகப்பெரிய சந்தையாக திகழ்கிறது. இங்கு மூன்று மில்லியன் கார்கள் விற்பனையாகின்றன. அதற்கடுத்த இடங்களில் ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளது.

விளம்பரம்

முதல் தலைமுறை ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் 2005-ம் ஆண்டு அறிமுகமானது. இரண்டாம் தலைமுறை 2011-ம் ஆண்டிலும் மூன்றாம் தலைமுறை 2018-ம் ஆண்டில் அறிமுகமானது.

சுசூகி நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான சந்தையாக இருக்கிறது. வருடம் தோறும் 4 மில்லியன் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதே எங்கள் இலக்கு. தொடர்ந்து முதலிடத்திலும் நீடிக்க வேண்டும், அதே சமயத்தில் மாறிவரும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டும். இந்தியாவின் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனையில் தோராயமாக 28 சதவிகித இடத்தை ஹேட்ச்பேக் கார்களே ஆக்ரமித்துள்ளன. அதிலும் மொத்த ஹேட்ச்பேக் விற்பனையில் ப்ரீமியம் ரக கார்கள் 60% பங்கை பிடித்துள்ளது என கூறுகிறார் டகூசி.

விளம்பரம்

ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்களுடன் ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் முதலிடத்தில் உள்ள மாருதி, அல்டோ கே10, S-Presso, சிலேரியோ, வேகன் ஆர் மற்றும் இக்னிஸ் போன்ற மாடல்களை அறிமுகப்படுத்தி ஒட்டுமொத்த ஹேட்ச்பேக் பிரிவிலும் முன்னனியில் திகழ்கிறது.

Also Read |
எல்ஐசி ஏஜெண்டாக தொடங்கிய வாழ்க்கை… இன்று ரூ.23,000 கோடிக்கு சொந்தக்காரர்… லச்மன் தாஸ் மிட்டலின் வெற்றிக் கதை!

இந்தியாவில் 1,000 நபர்களுக்கு 32 கார்களே உள்ளது. ஆனால் ஜப்பான் நாட்டில் இது 600 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இந்தியாவில் நிறைய பேருக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. புதிதாக கார் வாங்கும் பலரும் ஆரம்பத்தில் ஹேட்ச்பேக் மாடலையே தேர்வு செய்கிறார்கள். ஆகையால் இந்தப் பிரிவு கார்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும் என்பதால் நாங்களும் இதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம் என கூறுகிறார் டகூசி.

சிறந்த வீடியோக்கள்

விளம்பரம்

.

  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *