National

பித்ரு தோஷம் நீங்க மதுரை வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்ய குவிந்த பொதுமக்கள்..! – News18 தமிழ்

பித்ரு தோஷம் நீங்க மதுரை வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்ய குவிந்த பொதுமக்கள்..! – News18 தமிழ்
பித்ரு தோஷம் நீங்க மதுரை வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்ய குவிந்த பொதுமக்கள்..! – News18 தமிழ்


அமாவாசை திருநாளில் நமது முன்னோர்களை நினைத்து, அவர்களின் ஆசீர்வாதத்தை பெறக்கூடிய வகையில் பூஜை செய்து வழிபடுவார்கள். அதில் ஆடி, தை போன்ற மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றது. ஏனென்றால் இந்நாளில் நமது முன்னோர்களை நினைத்து வழிபடுவதன் மூலம் அவர்களின் ஆசைகளை நேரடியாக நிறைவேற்றுவதற்கு சமம் என்று கூறப்படுகின்றது.

மேலும் பித்ருலோகத்தில் இருக்கும் ஆன்மாக்கள் சாந்தி அடையும் என்றும் ஒருவேளை மறுபிறவி எடுத்திருந்தாலும் அப்பிறவியிலேயும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி தர்ப்பணம் செய்வார்கள்.இதன் மூலமாக முன்னோர்களின் ஆசிர்வாதம் பெற்று தலைமுறை தலைமுறையாக நம்முடைய பாவங்கள் சாபங்கள் தீரும் என்று சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் தை மாதத்தில் வரும் தை அமாவாசையை முன்னிட்டு மதுரை கல்பாலம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் காலையிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மக்கள் தனது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்தனர். பல்வேறு மந்திரங்கள் சொல்லப்பட்டு ஒவ்வொரு குடும்பங்களில் உள்ள முன்னோர்களை பொறுத்து எள்ளுடன் சேர்த்து பிண்டங்கள் வைக்கப்பட்டு, அதற்கு குங்குமம், மஞ்சள், பூக்கள் வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களின் பெயர்களுடன் மந்திரங்கள் சொல்லப்பட்டது. அவர்களை நினைத்து மூன்று முறை சுற்றி சூரியனைப் பார்த்து வழிபட்டு தர்ப்பணம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்

பின்பு கற்பூரம் காட்டி முன்னோர்களுக்காக பூஜைகள் செய்த பொருட்கள் அனைத்தையும் பிரார்த்தனை மேற்கொண்டு வைகை ஆற்றின் கரைத்தனர். அமாவாசைகளில் தை அமாவாசை சிறப்பு பெற்றது என்பதால் மதுரை மக்கள் அனைவருமே காலையிலிருந்து மதுரை வைகை ஆற்றில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *