National

பாஜகவில் ஐக்கியமாகும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள்… டெல்லி புறப்பட்டு சென்றார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜகவில் ஐக்கியமாகும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள்… டெல்லி புறப்பட்டு சென்றார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜகவில் ஐக்கியமாகும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள்… டெல்லி புறப்பட்டு சென்றார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் தேர்தல் அறிக்கைக்குழு மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் என்ன என்று கேட்டு வருகிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை குழுவும் மக்களைச் சந்திக்கும் பணியில் இறங்கியுள்ளது. கூட்டணி தொடர்பாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பாமக, தேமுதிக, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பாஜகவும் தயாராகி வருகிறது.

இந்த சூழலில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 12 பேர் பாஜக தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைகின்றனர். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு வர உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அண்ணாமலை இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

இதையும் படிங்க:
தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது… அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை…

அதைத்தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து மக்களவை தேர்தல் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இன்று இரவு அவர் சென்னை திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *