இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியின்போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இதனிடையே பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்காலிக பிரதமராக (காபந்து பிரதமர்) பலூசிஸ்தான் மாகாண எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரிஉயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அதன்படி, பெட்ரோல்லிட்டருக்கு ரூ.26-ம், டீசல்லிட்டருக்கு ரூ.17-ம் உயர்த்தப் பட்டுள்ளது.
ஏற்கெனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 305-க்கு விற்பனையான நிலையில் தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து ஒரு லிட்டர் ரூ.331-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ.311-க்கு விற்பனை செய் யப்பட்ட நிலையில் தற்போது வரியுடன் சேர்த்து ரூ.329-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.