State

பழநி கோயிலில் அபிஷேக பஞ்சாமிர்தம் ரூ.5 விலையேற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி | Panjamirtham Rs 5 price hike in Palani temple Devotees shocked

பழநி: பழநி முருகன் கோயிலில் அபிஷேக பஞ்சாமிர்தம் எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென ரூ.5 விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் அரை கிலோ டப்பா ரூ.35-க்கும், டின் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மலைக்கோயில் மற்றும் கிரி வீதி உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் தினமும் 20 ஆயிரம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகும். திருவிழாக் காலங்களில் தினமும் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் டப்பாக்கள் வரை விற்பனையாகும்.

இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென பஞ்சாமிர்தம் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 500 கிராம் பஞ்சாமிர்தம் டப்பா ரூ.35-ல் இருந்து ரூ.40-க்கும், ரூ.40 டின் ரூ.45-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உயர்த்தப்பட்ட விலையை டப்பாவில் அச்சிடாமல் , பேனாவால் எழுதி விற்பனை செய்கின்றனர். இந்த திடீர் விலையேற்றம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறுகையில், நெய் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் வேறு வழியின்றி பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டுள்ளது, என்று கூறினர்.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *