அந்தவகையில், மாணவியருக்கான பீச் வாலிபால் போட்டி, கோவளம் கடற்கரையில் நேற்று துவங்கியது. இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. போட்டியில், சென்னை அரியலுார், ராணிப்பேட்டை, நாமக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம் என, இருபாலரிலும் தலா, 38 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.
தொடர்ந்து, 14 வயதினர் பிரிவில், கோவை, 21 – 13, 21 – 10 என்ற கணக்கில், கிருஷ்ணகிரியையும், செங்கல்பட்டு, 21 – 13, 21 – 16 என்ற கணக்கில் ராமநாதபுரத்தையும் தோற்கடித்தனர்.
திண்டுக்கல், 21 – 14, 21 – 13 என்ற கணக்கில் கடலுரையும், அரியலுார், 21 – 8, 21 – 11 என்ற கணக்கில் திருவள்ளூர் அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. இன்று மாணவியருக்கான போட்டிகளும், நாளை மாணவர்களுக்கான போட்டிகளும் நடக்கின்றன.