பல்வலி என்பது பொதுவாகவே ஏற்படக் கூடிய பிரச்சினையாகும். இது எப்போது வேண்டுமானாலும் திடீரென்று வரும்.
எந்த வலியை வேண்டுமென்றாலும் பொருத்துக்கொள்ளலாம். ஆனால் பல வலியை பொருத்துக்கொள்ளவே முடியாது என பலரும் கூறி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
பற்கள் மற்றும் தாடைகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் வலியானது நீடித்தால் நீங்கள் கவனிக்காமல் விடக் கூடாது.
பல் வலி ஏற்பட்டால் வீட்டில் இருந்தப்படியே எப்படி சரிசெய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
1. உப்பு நீர்
உப்பு நீர் ஒரு இயற்கை கிருமிநாசினியாகும். இது ற்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் உணவு துகள்களை வெளியேற்றும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் உப்பைக் கலந்து கொப்பளித்து துப்பலாம். இதன் மூலம் வலியும் குறையும்.
2. ஐஸ் பேக்
பற்களில் வலி மற்றும் வீக்கம் அதிகமாக இருந்தால் ஐஸ் பேக் ஒத்தடமும் கொடுக்கலாம். ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி வலி இருக்கும் இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
3. பூண்டு
வலி உள்ள பற்கள் அல்லது ஈறுகள் மீது பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து பூசவும். பச்சை பூண்டை மென்றும் சாப்பிடலாம். இதன் மூலம் பூண்டின் சாறு வலி உள்ள இடத்தில் பட்டால் நல்லது.
4. கிராம்பு
முந்தைய காலங்களில் இருந்து பல்வலிக்கு சிகிச்சையளிக்க கிராம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். ஒரு சிறிய கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி கிராம்பு எண்ணெயைச் சேர்த்து வாய் கொப்பளிக்கவும்.
5. கொய்யா இலைகள்
கொய்யா இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை காயங்களை சரிசெய்யும். புதிய கொய்யா இலைகளை மென்று சாப்பிடுங்கள் அல்லது கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் சேர்த்து வாய் கொப்பளிக்கவும்.
பல்வலி கடுமையானதாக இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்ததாகும்.
- காய்ச்சல்
- சுவாசிப்பதில் அல்லது விழுங்குவதில் சிரமம்
- ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் வலி
-
வீக்கம் -
நீங்கள் கடிக்கும் போது வலி
போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே வைத்தியரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |