Tech

பயனர்களுக்கு புதிய வசதி – ‘வாட்ஸ்அப் வெப்’பில் சில முக்கிய மாற்றங்கள் | whatsapp web based interface has been changed details

பயனர்களுக்கு புதிய வசதி – ‘வாட்ஸ்அப் வெப்’பில் சில முக்கிய மாற்றங்கள் | whatsapp web based interface has been changed details
பயனர்களுக்கு புதிய வசதி – ‘வாட்ஸ்அப் வெப்’பில் சில முக்கிய மாற்றங்கள் | whatsapp web based interface has been changed details


சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் வெப்பில் பயனர் அனுபவத்துக்காக சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது மெட்டா. சாட் ஷேர் ஷீட்டில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். வாட்ஸ்அப் மெசேன்ஜரை மொபைல் போனில் மட்டுமல்லாது வாட்ஸ்அப் வெப் மூலமாக கணினியிலும் பயன்படுத்தலாம். இந்த முறை வாட்ஸ்அப் வெப்பில் மாற்றங்களை செய்துள்ளது மெட்டா.

வாட்ஸ்அப் வெப் மாற்றங்கள்: வழக்கமாக வாட்ஸ்அப் வெப் தளத்தில் பிறருக்கு போட்டோ, வீடியோ, ஆடியோ, டாக்குமென்ட், கான்டாக்ட் எண் போன்றவற்றை அனுப்ப இடது பக்கம் இருக்கும் கிளிப் வடிவிலான ஐகானை பயன்படுத்துவோம். அதன் மூலம் ஃபைல்களை பயனர்கள் எளிதில் அட்டாச் செய்வது வாடிக்கை. அதற்கு பக்கத்தில் எமோஜி அனுப்பும் வசதிகள் இருக்கும். வலது பக்கத்தில் வாய்ஸ் ஆடியோ பதிவு செய்வதற்கான ஐகான் இருக்கும்.

இப்போது வாட்ஸ்அப் வெப் தளத்தில் இதில் தான் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கிளிப் வடிவிலான ஐகானுக்கு பதிலாக ‘+’ வடிவிலான ஐகான் இடது பக்கம் வந்துள்ளது. அதை கிளிக் செய்தால், பயனர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் மீடியா ஃபைல்கள் குறித்த விவரங்கள் வருகின்றன. மொபைல் போன் பயனர்களின் சாட் பாரில் இருப்பது போலவே எமோஜி ஐகான் வலது பக்கம் இதில் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது பயனர்களுக்கு எளிதான பயனர் அனுபவத்தை வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன் மெட்டா அறிமுகம் செய்துள்ளது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *