
சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ள அவர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு நடிகையாக இப்போது உற்சாகமான இடத்தில் இருக்கிறேன். மொழிகள் தாண்டி எனக்கு வாய்ப்புகள் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவின் மூலம் அனைத்து மொழி மக்களுடன் இணைந்திருப்பது சுகமாக இருக்கிறது. என் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கின்றன. இது எனக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது. இதை ரசிகர்கள் எப்படி ஏற்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.