சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், “நான் மாட்ட மாட்டேன்” என நழுவிச் சென்றார்.
சென்னையில் நடைபெற்ற ‘Art Exhibition’ நிகழ்வில் இயக்குநர் மிஸ்கின் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “லியோ திரைப்படம் மிகவும் நன்றாக வந்துள்ளதாக கேள்விப்பட்டேன். விஜய் படத்தை பார்த்திருக்கிறார். அவருக்கு படம் பிடித்திருக்கிறதாம். படம் மிகப் பெரிய வெற்றியடையும். செப்.30-ம் தேதி நடைபெறும் இசை வெளியீட்டுவிழாவில் சந்திப்போம்” என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குறித்து கேட்டதற்கு, “இன்னும் நான் எதையும் பார்க்கவில்லை. ஊரிலிருந்து இப்போது தான் வந்தேன். என்னை மாட்ட வைக்காதீர்கள். நான் மாட்ட மாட்டேன்” என்றார். தொடர்ந்து, ‘பிசாசு 2’ எப்போது வரும் என்ற கேள்விக்கு, “அதுவும் மாட்டவைக்கும் கேள்விதான்” என்று முடித்துக்கொண்டார்.