சென்னை: ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு’படம் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. தொடர்ந்து கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை வடபழனி முருகன் கோயில் அருகே உள்ள ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளார்.
இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது, ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பதும், கஷ்டத்தில் வாடுபவர்களுக்கு உதவுவதும் ஆன்மிகத்தின் உச்சம் என்றார். விரைவில் சமூக தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, பல நல்ல காரியங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.