World

தேர்தல் மோசடி வழக்கு | அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது – சில நிமிடங்களில் விடுவிப்பு | Donald Trump arrested for overturn the result of the 2020 presidential election in Georgia

தேர்தல் மோசடி வழக்கு | அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது – சில நிமிடங்களில் விடுவிப்பு | Donald Trump arrested for overturn the result of the 2020 presidential election in Georgia


வாஷிங்டன்: தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இரன்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் போலீசார் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர். 2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை எதிர்கொள்கிறார். இதே தேர்தல் மோசடியில் 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனது கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இது அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்!” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தனது தனி விமானத்தில் ஏறும் பேட்டியளித்த ட்ரம்ப், “வழக்குத் தொடுப்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று குறிப்பிட்டார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *