National

தேனி ஈச்சமலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் …! – News18 தமிழ்

தேனி ஈச்சமலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் …! – News18 தமிழ்
தேனி ஈச்சமலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் …! – News18 தமிழ்


தேனியில் பிரதோஷத்தை முன்னிட்டு ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக அலங்காரத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து வழிபாடு செய்தனர் .

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தனி சன்னதியில் ஐந்து தலை நாகம் சூழ சிவபெருமான் சிவலிங்க வடிவில் காட்சி தர ஆறடி உயரத்தில் நந்தி பகவானும் அமர்ந்திருந்தனர்

முன்னதாக நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் பால் தயிர் சந்தனம் மஞ்சள் தேன் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

அதனைத் தொடர்ந்து சிவபெருமானுக்கும் நந்தி பகவானுக்கு வண்ண மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமானையும் நந்தி பகவானையும் தரிசித்துச் சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *