Sports

துணை தொழில் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

துணை தொழில் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
துணை தொழில் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு









பதிவு செய்த நாள்: பிப் 08,2024







உடுமலை : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், அகில இந்திய துணை தொழில் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது.

கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், 2017 – 19ல், இரண்டாம் ஆண்டு தொழில் பிரிவில் சேர்க்கப்பட்டது, அனைத்து தகுதியும், தேர்வில் பங்கேற்க இயலாது மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு, அகில இந்திய துணைத் தேர்வு மார்ச்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, துணை தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள், தாங்கள் பயின்ற தொழில் பயிற்சி நிலையங்கள் வரும், 15ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை, தொழில் பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி, இந்த வாய்ப்பை பயன்படுத்தி துணைத்தேர்வில் பங்கேற்கலாம்.

இந்தத் தேர்வு குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற, http://skilltraining.tn.gov.in மற்றும் https://ncvtmis.gov.in ஆகிய இணையதளங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இத்தகவலை, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


























Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *