
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும், தெலுங்கு வருடப் பிறப்பு (உகாதி), பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம்மற்றும் வைகுண்ட ஏகாதசிக்குமுந்தைய செவ்வாய்க்கிழமைகளில் ‘கோயில் ஆழ்வார் திரு மஞ்சனம்’ நடைபெறும்.
இதன்படி, வரும் 18-ம்தேதி தொடங்கவுள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் கர்ப்ப கிரகம், பலி பீடம், கொடிக்கம்பம், விமான கோபுரம், உப சன்னதிகள் என அனைத்து இடங்களும் பச்சை கற்பூரம், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை பொருட்களால் ஆன திரவத்தால் சுத்தம் செய்யப்பட்டது.