Cinema

தமிழில் தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4-ம் பாகம் | Sylvester Stallone the expendables 4 tamil movie

தமிழில் தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4-ம் பாகம் | Sylvester Stallone the expendables 4 tamil movie
தமிழில் தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4-ம் பாகம் | Sylvester Stallone the expendables 4 tamil movie


ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்து இயக்கிய அதிரடி ஆக்‌ஷன் படம், ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’. 2010-ம் ஆண்டு வெளியான இதில் ஜெட்லி, டால்ஃப் லண்ட்கிரன், ரேண்டி கோச்சர், டெர்ரி க்ரூஸ், ஸ்டீவ் ஆஸ்டின் உட்பட பலர் நடித்தனர். இந்தப்படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின.

2012-ம் ஆண்டு இதன் 2-ம் பாகம் வெளியாகி வெற்றிபெற்றது. இதன் கதையை சில்வஸ்டர் ஸ்டாலோன் எழுத, சைமன் வெஸ்ட் இயக்கி இருந்தார். இந்தப் படமும் வசூலில் பட்டையை கிளப்பியது. இதன் 3 பாகம், 2014-ம் ஆண்டு பாட்ரிக் ஹ்யூக்ஸ் இயக்கத்தில் வெளியானது. இந்நிலையில் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4’ படம், வரும் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியாகும் இதில் டோனி ஜா (Tony Ja), மேகன் போக்ஸ், இகோ யூவைஸ் (Iko Uwais) உட்பட பலர் இணைந்திருக்கிறர்கள். அணு ஏவுகணைகளை லிபியாவின் இரசாயனக் கூடத்திலிருந்து கடத்திச் சென்று அரசியலில் தொடர்புடைய பணக்காரனிடம் விற்று பணம் சம்பாதிக்கத் திட்டமிடுகிறான் சுவார்டோ ரஹ்மத். இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்படுகிறது. தி எக்ஸ்பென்டபிள் அணியினர் இதை எப்படி தடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *