Business

டொலர் கையிருப்பு மற்றும் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

டொலர் கையிருப்பு மற்றும் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
டொலர் கையிருப்பு மற்றும் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு


நாட்டின் டொலர் கையிருப்பில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்  ரூபாவின் பெறுமதியிலும் எதிர்பார்க்கத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


ருவன்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வாகனங்களின் இறக்குமதி

“நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 1,500 முதல் 2,000 வரையிலான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, இந்நிலையில் பொருளாதாரம் தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றது.

இந்த கட்டுப்பாடுகளில் இப்போது வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், இதனால் வாகன இறக்குமதிக்கான தடைகளை முறையாக நீக்குவதற்கான உயர்மட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தற்போது செயற்பட்டு வருகிறது.

கடன் மறுசீரமைப்பு

இந்தக் குழு நாட்டிற்கு அத்தியாவசியமான மற்றும் தவிர்க்க முடியாத வாகனங்களின் பட்டியலைத் தயாரித்து வருகிறது, அதன்படி எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

டொலர் கையிருப்பு மற்றும் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு | Increase In Dollar Reserves And Rupee Value

மேலும், எந்தெந்த வாகனங்களை இறக்குமதி செய்வது, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமா, பயன்படுத்திய வாகனங்கள் எவ்வளவு காலத்திற்கு இறக்குமதி செய்யப்படும், எத்தனை வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது போன்ற பல விடயங்களை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.” என அமைச்சர் தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் கடன் தவணைகள் அமைக்கப்பட்டு, அதற்கேற்ப கடன் திருப்பிச் செலுத்தப்படும் என்றும், இந்தக் கடன் திருப்பிச் செலுத்துவதால் கையிருப்பு குறையாது என்றும் அமைச்சர் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் வாட்ஸ்அப் சேனல் இல் இணைந்து கொள்ளுங்கள்…!



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *