நியூ ஜெர்ஸி: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புடன் நட்புரீதியிலான அடிப்படையில் கோல்ஃப் விளையாடினார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தற்போது அமெரிக்காவில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் அவர், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதி போட்டிகளை நேரில் கண்டுகளித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின.