
லக்னோ: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக குரூப் 2 பிளே ஆஃப் சுற்றில் இந்திய அணி, மொராக்கோவுடன் வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் மோதுகிறது.
இந்த போட்டி லக்னோவின் கோமதி நகரில் உள்ள விஜயந்த் காந்த் மினி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரோகன் போண்ணா, சுமித் நாகல், சசிகுமார் முகுந்த், திக்விஜய் பிரதாப் சிங், யுகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் 2-வது இடம் பிடித்திருந்த 43 வயதான ரோகன் போபண்ணா, டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியினருடன் இன்று இணைவார் என கேப்டன் ரோஹித் ராஜ்பால் தெரிவித்துள்ளார்.