லக்னோ: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியா – மொராக்கோ அணிகள் இன்று மோதுகின்றன.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக குரூப் 2 பிளே ஆஃப் ஆட்டத்தில் இந்தியா – மொராக்கோ அணிகள் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விஜயந்த் காந்த் மினி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான இந்திய அணியில் சுமித் நாகல், சசிகுமார் முகுந்த், திக்விஜய் பிரதாப் சிங், யூகி பாம்ப்ரி, ரோஹன் போபண்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.