கிரேய்க் எர்வின் – ஹர்திக் பாண்டியா
ஜூலை மாதம் ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரைத் தொடர்ந்து உலக அளவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை இந்த போட்டி தொடர் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தொடரைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் ரோகித் ஷர்மா மற்றும் கோலிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 29ஆம் தேதி நிறைவடைகிறது.
இதைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. ஜூலை 6 முதல் 14ம் தேதி வரை இந்த தொடர் நடத்தப்பட உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பிவிடுவார் எனக் கூறப்படும் நிலையில், அவர் தலைமையிலான அணியே ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே…
நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!
முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்… தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!
பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்… மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!
பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்… 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!
டெஸ்ட் போட்டி…. இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!