மாதாந்திர விருதுகள்: ஜனவரி மாதத்திற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐசிசி! (பட ஆதாரம்: கூகுள்)
ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து விருதுகளை வாழ்கிறார். அந்த வகையில் ஜனவரி மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்பின் இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 196 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த இங்கிலாந்து வீரர் ஒல்லி பாப் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதே போல் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஷமார் ஜோசப்பின் பெயரும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட்டும் ஜனவரி மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு யாருக்கு அதிகபடியான வாக்குகள் வருகிறதோ அதை பொறுத்து விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கடந்த ஜனவரி மாதம் சர்தேச மகளிர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய அயர்லாந்தின் ஏமி ஹண்டர் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான பெத் முனி, அலிசா ஹீலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அதிக வாக்குகள் பெறும் வீராங்கனைக்கு ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது என்பது குறிப்பிடத்தக்கது.