National

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறை சோதனை

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறை சோதனை
செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறை சோதனை


கரூர்: கரூர் அருகே ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ளசெந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர்பல முறை சோதனை நடத்தினர்.

கரூர் அடுத்த ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜிவீட்டிலும் கடந்த ஜூன் 13-ம் தேதிஅமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையே, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின்நீதிமன்ற காவல் 19-வது முறையாக வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு 5 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை 7.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.

தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாருக்கு எதிராக ஏற்கெனவே லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். அவர்தற்போது எங்கு இருக்கிறார், கரூர் வந்தாரா என்று அவரதுபெற்றோரிடம் விசாரித்ததுடன், வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனை பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.

தகவல் அறிந்து செந்தில் பாலாஜி வீடு முன்பு திமுகவினர், வழக்கறிஞர்கள், திரண்டனர். சோதனையின்போது துணைராணுவமோ, போலீஸாரோபாதுகாப்புக்கு வரவில்லை.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *