
சென்னை: சென்னையிலிருந்து ரயில் மூலம் 15 நாள் பஞ்ச துவாரகா யாத்திரைக்கு சீனிவாசா டூர் ஆபரேட்டர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
சீனிவாசா டூர் ஆபரேட்டர்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக மக்களை குறைந்த கட்டணத்தில் சுற்றுலா அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது. தற்போது ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள பஞ்ச துவாரகா ஸ்தலங்களை காண 15 நாட்கள் ஆன்மிக யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்.26 மற்றும் டிச.5-ம் தேதி ஆகிய நாட்களில் இச்சுற்றுலா தொடங்குகிறது.
சென்னையிலிருந்து ரயில் மூலம் புறப்பட்டு ஜெய்ப்பூர், புஷ்கர் பிரம்மன் கோயில், ஸ்ரீநாத் துவாரகை, காங்ரோலி துவாரகை, மவுன்ட் அபு – தில்வாடா ஜெயின் கோயில், அம்பாஜி துர்கை, மாத்ருகயா, மூல துவாரகா, பேட் துவாரகா, நாகேஸ்வர் ஜோதிர் லிங்கம், போர்பந்தர் காந்தி பிறந்த வீடு, சோம்நாத் ஜோதிர் லிங்கம், பாவ் நகர் கடல் கோயில் (பஞ்ச பாண்டவர்கள் பூஜை செய்த இடம்), உலகின் மிக உயர்ந்த சிலையான பட்டேல் சிலை பார்த்தல் மற்றும் ஸ்தம்பேஸ்வர் கடல் கோயில் ஆகியவற்றை இச்சுற்றுலாவில் காணலாம்.
காசி யாத்திரை: இதேபோன்று 9 நாள் காசி யாத்திரை சுற்றுலா வரும் செப்.4, அக்.9, நவ.20, டிச.18 ஆகிய தேதிகளில் தொடங்க உள்ளது.
இச்சுற்றுலாவில் ரயில் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டு காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, திரிவேணி சங்கமம், கயா கிருஷ்ணர் கோயில், விஷ்ணு பாதம், புத்தகயா, தாஜ்மகால் மற்றும் டெல்லியை சுற்றிப் பார்த்துவிட்டு சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீனிவாசா டூர் ஆபரேட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.