
Last Updated : 14 Jun, 2023 12:45 AM
Published : 14 Jun 2023 12:45 AM
Last Updated : 14 Jun 2023 12:45 AM

சென்னை: இந்திய டிஜிட்டல் சாதன சந்தையில் சியோமி பேட் 6 டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் திறன் கொண்ட பேட்டரி என சியோமி பேட் 6 சிறப்பு அம்சங்களில் கவனம் ஈர்க்கிறது. இதன் விலை குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த 2014 வாக்கில் இந்திய சந்தையில் நுழைந்தது சீன தேச நிறுவனமான சியோமி. பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம். படிப்படியாக பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய தொடங்கியது. அந்த வகையில் சியோமி பேட் 6 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சியோமி பேட் 6 நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
சிறப்பு அம்சங்கள்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 11-இன்ச், 2.8கே ஐபிஎஸ் எல்சிடி ஸ்க்ரீன்
- ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
- 13 மெகாபிக்சல் பின்புற கேமரா இடம்பெற்றுள்ளது
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது
- 8,840mAh பேட்டரி
- 33 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- டைப்-சி யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்
- 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ். இதன் விலை ரூ.26,999
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ். இதன் விலை ரூ.28,999
- விலையில் அறிமுக சலுகையும். வரும் 21-ம் தேதி விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது
- கீபோர்டு, கவர், ஸ்மார்ட் பென் ஆகியவையும் இதனுடன் கூடுதல் அக்சரிஸஸாக விற்பனை செய்யப்படுகிறது
Welcome to the most awaited launch of 2023 from the house of Xiaomi.
We are bringing you two amazing products – #XiaomiPad6 & #RedmiBuds4Active
Stay Tuned!! https://t.co/ORZNEnD5lz
— Xiaomi India (@XiaomiIndia) June 12, 2023
தவறவிடாதீர்!