பல்கேரியாவின் சோஃபியா நகரில் நடைபெற்று வரும் 75-ஆவது ஆவது ஸ்ட்ரேன்ட்ஜா சாவ்தேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் சச்சின், சாகா் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆடவா 57 கிலோ பிரிவில் இந்தியாவின் சச்சினும்-உஸ்பெகிஸ்தானின் பேசோவ் குடோனாசரும் மோதினான். தொடக்கத்தில் பேசோவ் ஆதிக்கம் செலுத்தியதால் சச்சின் தடுமாறினாா். எனினும் பின்னா் சுதாரித்துக் கொண்ட சச்சின் சிறப்பான ஆட்டத்தால் 3-2 என பேசோவை வீழ்த்தினாா். காலிறுதியில் ஜார்ஜியாவின் கப்னாட்சேவை எதிா்கொள்கிறாா் சச்சின்.
92 கிலோ பிளஸ் பிரிவில் இந்தியாவின் சாகரும் லித்துவேனியாவின் ஜேஸ்விஸிலஸ் ஜோனஸும் மோதினான். இதில் சரமாரி குத்துகளை விட்ட சாகா் 5-0 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தாா். உஸ்பெகிஸ்தானின் சோகிரோவுடன் மோதுகிறாா் சாகா். 63.5 கிலோ பிரிவில் வன்சாச் தோல்வி கண்டாா்.
மகளிா் பிரிவில் 66 கிலோ பிரிவில் அருந்ததி சௌதரி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். ஐரோப்பாவின் மிகவும் பழமையான குத்துச்சண்டை போட்டியான இதில் 30 நாடுகளைச் சேர்ந்த 300 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
காலிறுதியில் அமித், ஆகாஷ்
ஆடவா 51 கிலோ பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் 5-0 என்ற புள்ளி கணக்கில் உக்ரைனின் ருடிக் மக்ஸிமை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். மங்கோலியாவின் பட்டுல்காவை எதிா்கொள்கிறாா் அமித்.
71 கிலோ பிரிவில் ஆகாஷ் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்ஸின் டரோா் மக்கானை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். அயாலாந்தின் இயுகினை எதிா்கொள்கிறாா் ஆகாஷ்.