சாப்பிட்டவுடனே தூங்குவது உடல் பருமன் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் சாப்பிட்ட பிறகு புத்தகம் வாசிப்பது, வாக்கிங் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்
நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதில் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் தான் முதன்மை இடம் வகிக்கிறது. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். நம்மில் பலருக்கு சாப்பிட்ட உடனே இனிப்பு சாப்பிடுவது, பீடா போடுவது, புகைப்பிடிப்பது, டீ குடிப்பது, தூங்குவது, குளிப்பது என பல பழக்கவழக்கங்கள் இருக்கும். இதெல்லாம் சரியா? சாப்பிட்டவுடன் இந்த பழக்க வழக்கங்களையெல்லாம் பின்பற்றலாமா? அப்படி செய்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்ற குழப்பம் உள்ளதா? இதோ சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்யக்கூடாது? என்ன செய்யலாம்? என்பது குறித்த முழு விபரம் இங்கே.
சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதது என்னென்ன?
- “உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உள்ளது” என பழமொழியை நம்மில் பலர் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பல நேரங்களில் நாமே இந்த வார்த்தைகளை உபயோகித்து இருப்போம் அல்லவா? ஆம் சாப்பிட்டவுடன் குட்டி தூக்கம் போட்டால் தான் அந்த நாளே நமக்கு உற்சாகமாக இருக்கும் என்ற மனநிலையில் இருப்பார்கள். இது முற்றிலும் தவறான செயல்.
- சாப்பிடவுடன் நாம் தூங்கும் போது, உடலில் செயல்பாடுகள் மந்தமாக இருக்கும். செரிமானமும் முறையாக நடைபெறாது. நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.
- மேலும் சாப்பிட்டவுடனே தூங்குவது உடல் பருமன் பிரச்சனையை நமக்கு ஏற்படுத்தும் என்பதால் சாப்பிட்ட சில மணி நேரத்திற்கு நீங்கள் நேராக அமர்ந்து புத்தகம் வாசிப்பது, வாக்கிங் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்
- வீடுகளில் அல்லது ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் நம்மில் பலருக்கு ஏதாவது ஜூஸ் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். திடமான உணவுகளை சாப்பிட்ட பிறகு, திரவ உணவுகளை நீங்கள் உட்கொள்ளக்கூடாது. இவற்றை நீங்கள் சாப்பிடும் போது உடலில் செரிமான சாறுகளை உருவாகவிடாமல் தடுக்கக்கூடும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்பட்டு உடல் மந்தமாக இருக்கும்.
- சாப்பிட்டவுடன் காபி அல்லது டீ போன்ற சூடான பானங்கள் குடிக்கும் பழக்கும் உள்ளது. இது நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் உள்ள புரோட்டீன், இரும்பு சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்வதைத் தடுக்கிறது. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படும் உடம்பில் அலர்ஜியை ஏற்படுத்தும்.
- உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக? உடற்பயிற்சி செய்வோம். சாப்பிட்டவுடனே உடற்பயிற்சி செய்யும் போது தசை பிடிப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
- சாப்பிட்டு முடித்தவுடன் நீங்கள் குளிக்கும் போது, நாள் முழுவதும் உடல் சோம்பலாக இருக்கும். மேலும் கை மற்றும் கால்களில் ரத்த ஓட்டம் இயல்பை விட வேகமாக இருப்பதால் பல உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.
Image Credit: Google