World

சாக்லேட், டூத்பேஸ்ட் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு அதிகரிப்பு: அமெரிக்க நிறுவனங்கள் கவலை | Increase in theft of products including chocolate toothpaste US firms worried

சாக்லேட், டூத்பேஸ்ட் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு அதிகரிப்பு: அமெரிக்க நிறுவனங்கள் கவலை | Increase in theft of products including chocolate toothpaste US firms worried


நியூயார்க்: பொருளாதார மந்தநிலையால் அன்றாட செலவை சமாளிக்க, அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் டூத்பேஸ்ட், சாக்லேட், வாஷிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் திருடுவது அதிகரித்து வருவதாக, வால்மார்ட், டார்கெட் உள்ளிட்ட முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. சில வாடிக்கையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு திருட்டில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுபோல சிவிஎஸ் மற்றும் வால்கிரீன்ஸ் உள்ளிட்ட சங்கிலிதொடர் மருந்து விற்பனை நிறுவனங்கள், வீட்டு மேம்பாட்டு நிறுவனமான ஹோம் டெப்போ மற்றும் காலணி விற்பனையாளரான புட் லாக்கர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சில்லறை விற்பனை நிறுவனங்களும் தங்கள் கடைகளில் திருட்டு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளன.

இதுகுறித்து டிக்’ஸ் ஸ்போர்டிங் கூட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லாரன் ஹோர்ட் கூறும்போது, “திட்டமிட்ட சில்லறை வர்த்தக குற்றம் மற்றும் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது சில்லறை வர்த்தக நிறுவனங்களின் வருமானத்தை பாதித்து வருகிறது” என்றார்.

இதுகுறித்து டார்கெட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பிரையன் கார்னெல் கூறும்போது, “இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் எங்கள் கடைகளில் திருட்டு சம்பவங்கள் 120% அதிகரித்துள்ளது” என்றார்.

இதுபோன்ற திருட்டை தடுக்க, பொருட்களை கண்ணாடி அலமாரியில் வைத்து பூட்டி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *