Sports

சர்வதேச குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் ஆகாஷ் குமார் | Indian boxer Akash Kumar defeats Wasim Abusal to reach the final

சர்வதேச குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் ஆகாஷ் குமார் | Indian boxer Akash Kumar defeats Wasim Abusal to reach the final


புதுடெல்லி: முஸ்தபா ஹஜ்ருலஹோவிக் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஆகாஷ் குமார் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நாட்டில் உள்ள சரஜெவோ நகரில் முஸ்தபா ஹஜ்ருலஹோவிக் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 57 கிலோஎடைப் பிரிவு அரை இறுதியில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த இந்தியாவின் ஆகாஷ் குமார், பாலஸ்தீனத்தின் வாசிம் அபுசலை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக செயல்பட்ட ஆகாஷ் குமார் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த தொடரில் இந்தியா சார்பில் 11 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.





Source link

About Author

tamilnewspapper.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: