Health

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த யோகா – அர்னால்ட் பரிந்துரை

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த யோகா – அர்னால்ட் பரிந்துரை


உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று, நீரிழிவு (Diabetes).

வழக்கத்தில் “சர்க்கரை நோய்” என அழைக்கப்படும் நீரிழிவு நோயினால் தாக்கப்படுபவர்களுக்கு மருந்து, ஊசி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றுடன் உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஹாலிவுட் ஹீரோவும், உடற்பயிற்சி ஆர்வலருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) நீரிழிவு நோயிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

யோகா, நீரிழிவிலிருந்து தற்காத்து கொள்ள ஒரு நல்ல வழிமுறை.

நீரிழிவு நோயின் மீது யோகா ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்ள 16 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவற்றில் யோகா சிறப்பான பலனை வெளிப்படுத்தின.

யோகா பயிற்சியில் தசைகளுக்கும், உடல் இயக்கங்களுக்கும் சவாலோடு கூடிய பயிற்சி கிடைக்கிறது.

மேலும், யோகா பயில்பவர்களின் மனம் அமைதியடைகிறது. இதன் மூலம் மன அழுத்தம் பெருமளவு குறைகிறது.

யோகா மட்டுமின்றி நடைபயிற்சி கூட பயனுள்ள வழிமுறைதான்.

இரண்டு வழிமுறைகளையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தை ஏற்படுத்தி கொண்டு அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

இவ்வாறு அர்னால்ட் கூறினார்.

76-வயதிலும் ஆரோக்கியமாக வாழும் அர்னால்ட் பரிந்துரைத்திருக்கும் வழிமுறைகள் கடைபிடிக்க எளிதானவை என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2018 ஆகஸ்ட் மாத அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தில் (National Library of Medicine) பதிவான ஒரு ஆய்வறிக்கையில் தவறாமல் யோகா பயிற்சி செய்து வருபவர்களுக்கு உணவு உண்ணும் முறைகளிலும் ஒரு கட்டுப்பாடு வருவதாகவும், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் பெருமளவு குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *