சென்னை: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சந்திரமுகி 2’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தத் திரைப்படம் வரும் 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கான புரமோஷனும் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழா ஒன்றை நாளை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அதுவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
அன்றைய தேதியில் சித்தார்த்தின் சித்தா, ஜெயம் ரவியின் இறைவன், விஜய் ஆண்டனியின் ரத்தம், ஹரீஷ் கல்யாணின் பார்க்கிங் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.