National

கோவை மைவி3 ஆட்ஸ் நிறுவனர் மீது புகார் – 50 லட்சம் பேரிடம் மோசடியா?

கோவை மைவி3 ஆட்ஸ் நிறுவனர் மீது புகார் – 50 லட்சம் பேரிடம் மோசடியா?
கோவை மைவி3 ஆட்ஸ் நிறுவனர் மீது புகார் – 50 லட்சம் பேரிடம் மோசடியா?


படக்குறிப்பு,

சக்தி ஆனந்தன், இயக்குநர், மைவி3 ஆட்ஸ் நிறுவனம்

  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்

கோவையில் மைவி3 ஆட்ஸ் என்ற எம்.எல்.எம். முறையில் செயல்படக் கூடிய நிறுவனத்திற்கு ஆதரவாக பல ஆயிரம் பேர் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது அந்த மாநகரத்தையே உலுக்கியது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் மற்றும் வாகனங்களால் அங்கே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எம்.எல்.எம். நிறுவனத்திற்கு ஆதரவாக நடந்த இந்த போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பெரிதும் கவனம் ஈர்த்த நிலையில், அடுத்த ஒரே வாரத்தில் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. அதன் பேரில் அதன் நிறுவனர் சக்தி ஆனந்தனை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்திய ஒரே வாரத்தில் என்ன நடந்தது? புதிய மோசடி புகார் என்ன? காவல்துறையினர் என்ன கூறுகின்றனர்?

கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மைவி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 16 பேர் இன்று புகார் அளித்தனர்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *