National

கோவை பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்குப்பதிவு!

கோவை பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்குப்பதிவு!
கோவை பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்குப்பதிவு!


கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சர்மிளா கோவையில் முதல் முறையாக பேருந்தை
இயக்கி முதல் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெயரை பெற்றவர்.  பிரபலமான சர்மிளாவைப் பலரும் பாராட்டினர்.  சர்மிளாவுக்கு கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம் காந்திபுரத்திலிருந்து சோமனூர் செல்லும் வழித்தடத்தில் பேருந்து இயக்க பணி வழங்கியது.  இதனைத் தொடர்ந்து அவர் திடீரென பணியை ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சர்மிளாவிற்கு காரை அன்பளிப்பாக அளித்திருந்தார்.  இந்த நிலையில் இவர் கடந்த 2-ம் தேதி கோவை சத்தி ரோடு சங்கனூர் சந்திப்பு அருகே காரில் சென்ற போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து பணியில் இருந்த காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி அவரை விசாரித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை: மக்களவை ஒப்புதல்!

அதனை வீடியோ எடுத்த சர்மிளா,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான தகவலுடன் பதிவிட்டதாக காவல் உதவி ஆய்வாளர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில்  இந்திய தண்டனைச் சட்டம் IPC 506(i), 509, 66C தகவல் தொழில்நுட்ப பிரிவின் (information technology act) கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *