கோவை / பொள்ளாச்சி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை மாவட்டத்தில் ஆழியாறு கவியருவி, கோவை குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி – வால்பாறை சாலையில், வில்லோனி வனப்பகுதியில் ஆழியாறு கவியருவி உள்ளது. சுமார் 80 அடி உயரத்தில் இருந்து மிதமான வேகத்தில் கொட்டும் அருவியில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.