National

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம்: பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு | Kalamassery blasts: Death toll climbs to 5

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம்: பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு | Kalamassery blasts: Death toll climbs to 5
கேரளா குண்டு வெடிப்பு சம்பவம்: பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு | Kalamassery blasts: Death toll climbs to 5


கொச்சி: கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மலயாட்டூரைச் சேர்ந்த 45 வயதான சாலி பிரதீபன் என்ற பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கேரள அரசு அறிவித்துள்ளது.

வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் எட்டு பேர் ஐசியுவில் உள்ளனர், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மீதமுள்ள ஒன்பது பேர் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள மதவழிபாட்டு தளத்தில் கடந்த 29-ம் தேதி காலை 9 மணியளவில் நடந்த குண்டு வெடிப்பு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் 12 வயது சிறுமி லிபினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சோதனை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரணடைந்தவர் வாக்குமூலம்: ஜெபக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை தொடர்ந்து, கொச்சி பகுதியை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் (52) என்பவர் கொடைகாரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘‘யெகோவாவின் சாட்சிகள் சபையில் கடந்த 16 ஆண்டு களாக உறுப்பினராக இருக்கிறேன். சபை உறுப்பினர்கள், மதக் கொள்கையில் இருந்து விலகிச் சென்றதால், அவர்களது ஜெபக் கூட்டத்தில் குண்டு வைத்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘கொள்கை, கோட்பாடுகளில் இருந்து விலகி, சதிகார சபையாக மாறி, பொய்யை பரப்பி வருகின்றனர். இதை தடுப்பதற்காகவே குண்டுகளை வெடிக்கச் செய்தேன்’’ என்று, முன்னதாக சமூக வலைதளத்தில் நேரலை வீடியோ பதிவையும் அவர் வெளியிட்டிருந்தார். ஆனால், ‘‘டோமினிக் எங்கள் சபையை சேர்ந்தவர் அல்ல. அவர் யாரென்றே தெரியாது’’ என யெகோவாவின் சாட்சிகள் சபை நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *