Sports

கேண்டிடெட்ஸ் செஸ் இன்று தொடக்கம்: பிரக்ஞானந்தா, டி.குகேஷ், விதித் மீதான எதிர்பார்ப்பு | போட்டியாளர்களின் செஸ் போட்டி இன்று தொடங்குகிறது பிரக்ஞானந்தா டி குகேஷ் விடிட் மீதான எதிர்பார்ப்பு

டொராண்டோ: நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுக்கு எதிராக மோதும் போட்டியாளரைத் தீர்மானிக்கக்கூடிய பிடே கேண்டிடெட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் இன்று தொடங்குகிறது.

இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.பிரக்ஞானந்தா (2,747), டி.குகேஷ் (2,747), விதித் குஜராத்தி (2,747) ஆகியோருடன் ரஷ்யகிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி (2,758), அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருணா (2,804), அஜர்பைஜான் நிபாஸ்டன் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா (2,789), பிரான்ஸ் கிராண்ட்மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜா (2,760) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இவர்கள் 8 பேரும் தலா இரு முறை நேருக்கு நேர் மோதுவார்கள். புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தைப் பெறுபவர் சாம்பியன் பட்டம்வெல்வார். பட்டம் வெல்பவருக்கு ரூ.45 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

மேலும் அடுத்த உலகசாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான ஆட்டத்தில் விளையாடுவதற்கான தகுதியையும் பெறுவார். மதிப்புமிக்க கேண்டிடேட்ஸ் தொடரில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதனால் அவர்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தொடரில் பட்டம் வெல்லக்கூடிய வீரர்களில் ஒருவராக பிரக்ஞானந்தா இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 8 முறை சாம்பியனான ரஷ்யாவின் பீட்டர் ஸ்விட்லர் பயிற்சியாளராக செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 23-ம் தேதி வரை நடைபெற உள்ள கேண்டிடெட்ஸ் தொடரின் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து முதல் சுற்று 4-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 14 சுற்று நடைபெறும்.

ஆர்.வைஷாலி: ஆடவர் பிரிவுடன் மகளிர் பிரிவிலும் கேண்டிடெட்ஸ் செஸ் போட்டி நடத்தப்படுகிறது. இதில் சீனாவின் லீ டிங்ஜி (2,550), பல்கேரியாவின் நூர்கியுல் சலிமோவா (2,426), இந்தியாவின் ஆர்.வைஷாலி (2481), சீனாவின் டான் சோங்கி (2,521), இந்தியாவின் கொனேரு ஹம்பி(2546), ரஷ்யாவின் கேத்ரீனா லக்னோ (2,542), அலெக்ஸாண்ட்ரா (2,542), உக்ரைனின் அனா முசிசுக் (2,520) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *