
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழ் வைப்பகம் வார விடுமுறை மாற்றம் செய்யப்பட்டது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வை நேரமும் நீடிக்கப்பட்டது.
கீழடி அகழ் வைப்பகத்துக்கு தினமும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் பார்வையிட காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். வார இறுதி நாட்களாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பார்வையாளர்கள் வருகின்றனர்.
இதனால் அவர்களால் முழுமையாக தொல்பொருட்களை பார்க்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து ஆக.1-ம் தேதி முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பார்வை நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். தற்போது அகழ் வைப்பகத்துக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறை விடப்படுகிறது.
ஆக.1-ம் தேதி முதல் வார விடுமுறை செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்படுகிறது. இந்த தகவலை தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.