Sports

கால்பந்து | பீலே சாதனையை முறியடித்தார் நெய்மர் | Neymar breaks Peles record to become Brazil’s all-time top

சாவோ பாவ்லோ: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று தொடங்கி உள்ளது. இதில் தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் நேற்று பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் – பொலிவியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ரோட்ரிகோ (24 மற்றும் 53-வது நிமிடங்கள்), நெய்மர் (61 மற்றும் 90 3 நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களும் ரஃபின்ஹா (47-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.

இந்த ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்ததன் மூலம் பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த மறைந்த ஜாம்பவான பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார் நெய்மர். 3 முறை உலகக் கோப்பையை வென்றிருந்த பீலே 92 ஆட்டங்களில் விளையாடி 77 கோல்கள் அடித்திருந்தார். தற்போது நெய்மர் 78 கோல்கள் அடித்து பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *