State

காற்றாலை மூலம் மிக அதிகபட்சமாக 5,414 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது | maximum of 5,414 MW of electricity has been generated by wind power

சென்னை: காற்றாலை மூலம் மிக அதிகபட்சமாக 5,414 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அனல், அணு, நீர் மற்றும் எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், தமிழ்நாடு மின்வாரியம் மூலம் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர, காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரமும் சீசன்காலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 10-ம் தேதி மாலை 6.40 மணி அளவில் அதிகபட்சமாக 5,414 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்தன. தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 3.20 மணிக்கு 3,794 மெகாவாட்டும், காலை 7.50 மணிக்கு 4,314 மெகாவாட் மின்சாரத்தையும் காற்றாலைகள் உற்பத்தி செய்தன.

மேலும், சூரியசக்தி மூலம்கடந்த 10-ம் தேதி 4, 672 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் சராசரியாக 10 ஆயிரம்மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுவதால், தமிழ்நாடுமின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல் மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *