Sports

காயம் காரணமாக அவதி: இறுதிப் போட்டியில் தீக் ஷனா பங்கேற்பது சந்தேகம் | Mahesh Theekshana participation in the final is doubtful

காயம் காரணமாக அவதி: இறுதிப் போட்டியில் தீக் ஷனா பங்கேற்பது சந்தேகம் | Mahesh Theekshana participation in the final is doubtful


கொழும்பு: தொடைப் பகுதியில் ஏற்பட்டகாயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக் ஷனா பங்கேற்பது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிர் ஸ்பின்னரான தீக் ஷனா, ஆசிய கோப்பைதொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்குஎதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது தொடைப்பகுதியில் காயம் அடைந்தார். வலது தொடையில்ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்துகொள்ள அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் முடிவு வெளிவந்த பின்னரே அவர், நாளை (17-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா? என்பது தெரியவரும்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தீக் ஷனா பலமுறை பீல்டிங்கின் போது வெளியே சென்றார். இருப்பினும் பந்து வீச்சில் தனது 9 ஓவர்களையும் முழுமையாக வீசினார். உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் ஏற்கெனவே முன்னணி வீரர்களான வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, லகிரு மதுஷங்கா, லகிரு குமரா ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது தீக் ஷனாவின் காயமும் இலங்கை அணியை கவலையடையச் செய்துள்ளது. – பிடிஐ





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *