
டெல் அவிவ்: காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தரப்பில், மனிதாபிமான அடிப்படையில் வடக்கு காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடனுன், குறைந்தது மூன்று நாட்களுக்கு மேலாவது போர் நிறுத்தம் மேற்கொள்ளும்படி இஸ்ரேலிடம் வேண்டியுள்ளதாகக் கூறினார். அதேவேளையில் "இஸ்ரேல் நிச்சயமாக முழுமையான போர் நிறுத்தத்தை இபோதைக்கு மேற்கொள்ள வாய்ப்பில்லை" என்றும் கூறினார்.