Health

ஒரு வருடத்திற்கு சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்..?

ஒரு வருடத்திற்கு சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்..?


சர்க்கரை இல்லாத டயட் ஒருபோதும் சாத்தியம் இல்லை என பலரும் கூறிக் கொண்டிருக்க அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி ஒரு வருட காலத்திற்கு சர்க்கரை எதுவுமே சேர்க்காமல் சாதித்துள்ளார் நடிகர் கார்த்திக் ஆர்யன். சமீபத்தில் இவரது Chandu Champion படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து, தனக்குப் பிடித்தமான ரசமலாய் ஸ்வீட் சாப்பிட்டு அதை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்திக் ஆர்யான், ஒரு வருடத்திற்குப் பிறகு இப்போதுதன் இனிப்பு சாப்பிடுகிறேன் எனவும் இதற்காக கடுமயான பயிற்சிகளை எடுத்து வந்தேன் என்றும் கூறியுள்ளார்.

விளம்பரம்

இதுபோல் ஒரு வருட காலத்திற்கு நாமும் சர்க்கரை சேர்க்காத டயட்டைப் பின்பற்றினால் நம் உடலில் ஏற்படும் விளைவுகள் மற்றும் இதனை எல்லாரும் பின்பற்றலாமா என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம் : 

சர்க்கரையை குறைத்துக் கொள்வதாலோ அல்லது முற்றிலும் நிறுத்துவதாலோ நம் உடலில் நேர்மறையான பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. சர்க்கரை சேர்க்காததால் முதலில் சில அறிகுறிகள் தோன்றலாம். அதன்பிறகு உங்கள் உடலின் ஆற்றல் அளவு குறையமல் நிலையாக இருப்பதோடு மன நிலையிலும் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படாமல் இருப்பதை உணர்வீர்கள். முக்கியமாக இதனால் நமது மெட்டபாலிஸம் மேம்படுகிறது. இதன் காரணமாக உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் எதுவும் வருவதில்லை. அதோடு முகப்பரு, வடுக்கள் மறைந்து இளமையான தோற்றமும் கிடைக்கிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சுருதி கே பரத்வாஜ்.

விளம்பரம்

மேலும் டயட்டில் சர்க்கரை சேர்க்காத போது உடலில் ரத்த அழுத்தம் குறைந்து இதய நலம் மேம்படுகிறது. ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் 20 கலோரிகள் உள்ளது. ஆகையால் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உங்களின் இன்சுலின் உணர்திறனுக்கு உதவியாக இருப்பதோடு டைப்-2 டயாபடீஸ் வராமலும் தடுக்கலாம். மேலும் இனிப்பு சேர்க்காததால் பற்களில் சொத்தைகள் வராமல் ஆரோக்கியம் பெறுகிறது.

சர்க்கரை சேர்க்காத டயட்டின் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், நமது அறிவாற்றல் செயல்பாடுகளில் முன்னேற்றமும் மனதில் தெளிவும் அதிகமாகிறது. தேவையற்ற கலோரிகளை நாம் நீக்கும் போது நமது உடல் எடை குறைவதோடு சுய மரியாதையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. மேலும் இரவில் நன்றாக தூக்கம் வருவதால் நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் இது நேர்மறையான தாக்கத்தை செலுத்துகிறது.

விளம்பரம்

ஆனால் சர்க்கரையை டயட்டில் சேர்க்க கூடாது என்பதற்காக, அதற்குப் பதிலாக வெள்ளம், நாட்டுச் சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்தக் கூடாது. சர்க்கரையிலும் பனை வெல்லத்திலும் ஒரேயளவு கலோரிகள் தான் உள்ளது. அதேப்போல் குளிர்பானங்களை தவிர்ப்பதும் நல்லது.

Also read |
சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே ரத்த சர்க்கரை அளவை எகிற வைக்கும் உணவுகள்.. எச்சரிக்கையாக இருங்கள்!

உங்களுக்கு உணவிலிருந்து முழுமையான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டுமென்றால், ஒருபோதும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை சேர்க்காதீர்கள். இதுகுறித்து உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் மருத்துவர்களிடமோ அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடமோ ஆலோசனை பெறலாம். ஒட்டுமொத்தமாக பார்க்கையில். சர்க்கரையை குறைத்துக் கொள்வதால் நம் உடலுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இதனால் நம் உடலும் மனமும் ஒருசேர ஆரோக்கியம் பெறுகிறது.

விளம்பரம்

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *