Sports

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதல் முறையாக 2-வது இடம் பிடித்தார் ஷுப்மன் கில் | ODI Rankings Shubman Gill is Number 2 for the first time

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதல் முறையாக 2-வது இடம் பிடித்தார் ஷுப்மன் கில் | ODI Rankings Shubman Gill is Number 2 for the first time


துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் முதன் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷுப்மன் கில் 58 ரன்கள் சேர்த்திருந்தார். இதன் மூலம் ஓர் இடம் முன்னேறி 759 புள்ளிகளுடன் 2-வது இடத்தை அடைந்துள்ளார்.

கேப்டன் ரோஹித் சர்மாவும் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் 3 அரை சதங்கள் விளாசிய அவர், 707 ரேட்டிங் புள்ளிகளுடன் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 122 ரன்கள் விளாசிய விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் 3 பேர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் 3 பேட்ஸ்மேன்களும் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர். கேப்டன் பாபர் அஸம் 863 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இமாம் உல்ஹக் 735 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், பஹர் ஸமான் 705 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஓர் இடம் முன்னேறி 739 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக்கும் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 7-வது இடத்தை அடைந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா 21 இடங்கள் முன்னேற்றம் கண்டு 11-வது இடத்தை பிடித்துள்ளார். அவர்,கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் 3 சதங்கள், 2 அரை சதங்கள் விளாசியிருந்தார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 6 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தையும், மார்னஷ் லபுஷேன் 24 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய அணியின் கே.எல்.ராகுல் 10 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தையும், இஷான் கிஷன் 2 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தையும் அடைந்துள்ளனர்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் அவர், 9விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 692 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் ஓர் இடம் முன்னேறி 666 புள்ளிகளுடன் 2-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்குடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 8 இடங்கள் முன்னேறி 27-வது இடத்தை பிடித்துள்ளார். மொகமது சிராஜ் 9-வது இடத்தில் தொடர்கிறார். ஹர்திக் பாண்டியா 21 இடங்கள் முன்னேறி 56-வது இடத்தை அடைந்துள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *