Sports

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை 'ஆட்டமிழக்காமல்' இருந்த வீரர்கள்!

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை 'ஆட்டமிழக்காமல்' இருந்த வீரர்கள்!
ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை 'ஆட்டமிழக்காமல்' இருந்த வீரர்கள்!


ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ஆட்டமிழக்காமல் இருந்த டாப் 5 வீரர்கள் குறித்த விவரங்கள், தற்போது வெளியாகி உள்ளன. இதில் 3 இடங்களை சென்னை வீரர்கள் தக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவைன் பிராவோ

ஐபிஎல் தொடரில் சென்னை, குஜராத் அணிகளுக்காக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் அதிகபட்சமாக 39 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

யூசுப் பதான்

அதிரடி யூசுப் பதான் இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்காக ஆடிய யூசுப் அதிகபட்சமாக 44 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

கிரன் பொல்லார்ட்

அதிரடி பேட்ஸ்மேன் கிரன் பொல்லார்ட் இந்த பட்டியலில் 3-வது இடத்தில் நீடிக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே ஆடிய பொலார்ட் ஆட்டமிழக்காமல் இருந்ததில் அரை சதம் (5௦) அடித்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்த பட்டியலில் 2-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீடித்து வரும் ஜடேஜா, இதுவரை 59 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் கடைசி வரை விளையாடியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி

ஐபிஎல்-லில் பல்வேறு உடைக்க முடியாத சாதனைகளை வைத்திருக்கும் ரசிகர்களின் பேவரைட் கேப்டன் தோனி இதிலும் நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

உச்சபட்சமாக 7வது போட்டிகளில் தோனி நாட் அவுட் வீரராக கடைசி பந்து வரை களத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார்.

இதுவரை 186 போட்டிகள் விளையாடி இருக்கும் தோனி 4886 ரன்களை ஐபிஎல் தொடரில் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அவரின் சராசரி 40.25 ஆக உள்ளது.

இந்த 17-வது சீசனுடன் தோனி ஐபிஎல் தொடரை விட்டு விலகுகிறார். அதனால் இந்த சீசன் தோனிக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள் மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியாவின் கூட்டணியின் முக்கிய அங்கம் இவர்தான் : ராகுல் பேட்டி!

Thalapathy 69: விஜயின் சம்பளம் இத்தனை கோடியா?



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *