Business

ஊழியர்களின் எண்ணிக்கை: Employee count down on IT company: 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்த ஐடி நிறுவனங்கள்… கதறும் ஊழியர்கள்… – employee count down on it company

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அறிவித்துள்ளன. அதாவது டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களில் 63,759 ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது 2023-24ம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் ஊழியர்களின் எண்ணிக்கை பெரும் அளவு குறைந்ததாக தெரிவித்துள்ளன.

இந்தியாவில் உள்ள டாப் 3 ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் மொத்த ஆண்டு ஊழியர்களின் இழப்பு 63,759 என பதிவு செய்துள்ளது.

அதாவது ஐடி தங்களின் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் போது, நிறுவனத்திலிருந்து எவ்வளவு ஊழியர்கள் விலகி உள்ளனர் என்ற தகவலையும் தெரிவிக்கும். இந்த நிலையில் விப்ரோ 4 ஆம் காலாண்டில் 6,180 ஊழியர்களின் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 2023-24ம் நிதியாண்டு முழுவதும் விப்ரோ நிறுவனத்திலிருந்து 24,516 ஊழியர்கள் மொத்தமாக வெளியேறி உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 2,34,054 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகையில் 9.1 சதவீதம் குறைவு ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸில், 2024 நிதியாண்டில் ஊழியர்களின் எண்ணிக்கை 13,249 குறைந்துள்ளது. அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் 1,759 ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து விலகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேபோல் இன்ஃபோசிஸ் ஊழியர்களின் எண்ணிக்கை 25,994 குறைந்துள்ளது. 4வது காலாண்டு 5,423 பணியாளர்கள் இழந்துள்ளனர். 2023ஆம் நிதியாண்டில் 3,43,234 ஆக இருந்த நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 24ஆம் நிதியாண்டின் இறுதியில் 7.5 சதவீதம் குறைந்து 3,17,240 ஆக இருந்தது.

குறைந்தது ரூ.1000 முதலீடு.. 7.5% வட்டி உங்களுக்கு..

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *