![ஈர்க்கும் இசை, கார்த்திக் சுப்பராஜ் மேஜிக்… – ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசர் எப்படி? ஈர்க்கும் இசை, கார்த்திக் சுப்பராஜ் மேஜிக்… – ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசர் எப்படி?](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/11/xlarge/1121651.jpg)

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில் பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.