
சென்னை: தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக்கை கனெக்ட் மீடியா தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ படத்தை அடுத்து தனது 50-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷண்,காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.