
‘நேரம்’, ‘பிரேமம்’, ‘கோல்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனின் புதிய படமான ‘கிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ இளையராஜா குரலில் வெளியாகியுள்ளது.
2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘பிரேமம்’. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியான அல்போன்ஸ் புத்திரனின் ‘கோல்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப்படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர்.
இந்நிலையில் இம்முறை நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் களமிறங்கியுள்ள அல்போன்ஸ் தனது படத்துக்கு ‘கிஃப்ட்’ என பெயரிட்டுள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வித்தியாசமான முறையில் ‘மியூசிக்கல் லுக்’ ஆக வெளியிட்டுள்ளார் அல்போன்ஸ்.
வீடியோ எப்படி? – வீடியோவை பொறுத்தவரை கருப்புத்திரையின் பின்னணியில் இளையராஜாவின் குரல் ஒலிக்கிறது. ராஜாவின் தத்தகாரத்துடன் இசைக்கருவிகள் இணைய வார்த்தைகள் பிரயோகம் இல்லாத இந்த முயற்சி ஈர்க்கிறது. இளையராஜா குரலில் புத்துணர்வைக்கூட்டும் இந்த இசைத்துண்டு வீடியோ, பாடல்கள் மற்றும் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. வீடியோ: