கொழும்பு: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன்களை தனது பவுலிங்கில் அலறவிட்டார் முஹம்மது சிராஜ். 7 ஓவர்களை வீசிய அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இலங்கையின் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை 15.2 ஓவர்களில் 50 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழுந்தது. இதன் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோரை ஈட்டிய அணி என்ற வரலாற்று கரும்புள்ளியை பெற்றது இலங்கை. இதற்கு முன்னதாக 2000-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்க தேசம் 87 ரன்களில் சுருண்டது தான் குறைந்த ஸ்கோர் என இருந்தது. அதனை தற்போது இலங்கை முறியடித்துள்ளது.
இதற்கெல்லாம் காரணம் இந்திய அணியின் பவுலர் முஹம்மது சிராஜ். இலங்கையின் டாப் ஆர்டரை அடுத்தடுத்து சீர்குலைத்த சிராஜை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். 0, 0, 0, 0, 0, 0, W, 0, W, W, 4, W இவை அனைத்தும் சிராஜின் முதல் 12 பந்துகளின் ரன் நிலவரம். அவரின் அட்டகாசமான பவுலிங்கை “W 0 W W 4 W” என்ற ஹேஷ்டேக் மூலம் எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் சிராஜின் முதல் 12 பந்துகளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
0, 0, 0, 0, 0, 0, W, 0, W, W, 4, W in the first 12 balls by Siraj.
The Full Credit Goes to This Man -50 ALL OUT in #AsianCup2023 Final #INDvSL , This incredible Innings Will be Remembered Forever pic.twitter.com/jc7uSH24sj
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) September 17, 2023
மற்றொருவர், வீடியோவுடன் சிராஜ் எடுத்த விக்கெட்டுகளை பதிவிட்டுள்ளார்.
Mohammad Siraj today in the Powerplay
0,0,0,0,0,0,W,0,W,W,4,W,0,0,0,W,0,1,1,0,0,0,0,0,0,1,0,0,0,0.
26 dot balls in the 5 overs with 5 wickets pic.twitter.com/xB7tcNBLHx
— Srinath (@SrinathKohl) September 17, 2023
“அட்டகாசமான ஸ்பெல். ரோகித் சர்மா ஆட்டத்தில் இறுதியில் இதனை கொண்டாடுவார்” என பதிவிட்டுள்ளார்.
Watch The Greatest Spell of Mohammed Siraj
Don’t Miss The Celebration Of Captain Rohit Sharma In The End #Siraj #INDvsSLpic.twitter.com/JFYC3Dgg4c
— Immy² (@BeingImRo45) September 17, 2023
வரலாற்றில் இது ஒரு சிறப்பான ஸ்பெல் பவுலிங் என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
Mohammed Siraj in the Powerplay in the Asia Cup final:
0,0,0,0,0,0 – 1st over
W,0,W,W,4,W – 2nd over
0,0,0,W,0,1 – 3rd over
1,0,0,0,0,0 – 4th over
0,1,0,0,0,0 – 5th overOne of the Greatest spells ever in ODI history,Miyann#SLvsIND#siraj #AsiaCup23 pic.twitter.com/s2Hn2NpM7d
— VINEETH (@sololoveee) September 17, 2023