Last Updated : 09 Jun, 2023 10:58 AM
Published : 09 Jun 2023 10:58 AM
Last Updated : 09 Jun 2023 10:58 AM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 11 புரோ 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. ரியல்மி 11 புரோ 5ஜி மற்றும் 11 புரோ+ 5ஜி என இரண்டு மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி 11 புரோ 5ஜி வரிசை போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
11 புரோ+ சிறப்பு அம்சங்கள்
- 6.7 இன்ச் திரை அளவு
- ஃபுல் ஹெச்.டி+ டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமான்சிட்டி 7050 ப்ராசஸர்
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்
- 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 5,000mAh பேட்டரி
- பின்பக்கத்தில் 3 கேமரா இடம் பெற்றுள்ளது
- அதில் 200 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது
- 5ஜி நெட்வொர்க்
- டைப்-சி யுஎஸ்பி
- 8ஜிபி ரேம் கொண்டுள்ள போனின் விலை ரூ.27,999
- 12ஜிபி ரேம் கொண்டுள்ள போனின் விலை ரூ.29,999
11 புரோ சிறப்பு அம்சங்கள்
- 11 புரோ+ மாடல் போனுடன் ஒப்பிடும்போது 11 புரோ போனில் பின்பக்கத்தில் இரண்டு கேமரா மட்டுமே இடம் பெற்றுள்ளது
- 108 மெகாபிக்சல் கொண்டுள்ளது இதன் பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் போனின் விலை ரூ.23,999
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் போனின் விலை ரூ.24,999
- 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் போனின் விலை ரூ.27,999
Who says it’s just one person’s effort to bring things to life.
Check out what happens when the real #SuperstarMeetsSuperZoom. Introducing #realme11ProSeries5G. #200MPzoomToTheNextLevel #realmeXSRK @Flipkart
Know more: https://t.co/GZ4biN5eMP pic.twitter.com/k1ORgsX82X
— realme (@realmeIndia) June 8, 2023
தவறவிடாதீர்!